ETV Bharat / bharat

கடவுளின் தேசத்து இரவுக்கு பூட்டு! - கேரளா கொரோனா

கேரள மாநிலத்தில் கோவிட்-19 தாக்கம் அதிகரித்து வருவதால், இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (ஏப். 20) இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

கேரளா ஊரடங்கு
கேரளா ஊரடங்கு
author img

By

Published : Apr 19, 2021, 10:59 PM IST

Updated : Apr 20, 2021, 6:06 AM IST

திருவனந்தபுரம் (கேரளா): கேரளாவில் நாளை (ஏப். 20) முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில தலைமை செயலாளர் விபி ராய் தலைமையில் நடந்த கூட்டத்தை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொது போக்குவரத்துக்கு எந்த தடையும் இருக்காது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிசெய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் அனைத்தும் மாலை 7:30 மேல் இயங்கக்கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 10, 12ஆவது வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட மாட்டாது என அரசு அறிவித்துள்ளது. தேர்வுகள் அனைத்தும் கரோனா வழிமுறைகளை பின்பற்றப்பட்டு, தகுந்த கட்டுபாடுகளுடன் நடத்தப்படும் என அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

கேரளாவில் தொடர்ந்து கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக மருத்துவர்களுக்கு கரோனா உறுதியானதைத் தொடர்ந்து, மாநிலத்தின் தலைநகரில் உள்ள பிரபல ஸ்ரீ சித்ரா மருத்துவமனையில் இதய நோய் தடுப்புப் பிரிவு முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.

Last Updated : Apr 20, 2021, 6:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.