பெங்களூரு: சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக பெங்களூரு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அலுவலர்கள் விசாரணை நடத்தியதில், பெங்களூரு எலக்ட்ரானிக் தெருவில் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவரும், சென்னையை சேர்ந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 84 கிராம் கொக்கைன், 40 கிராம் MDMA அல்லது மோலி என்று அழைக்கப்படும் உயர்ரகப் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முக்கிய குற்றவாளியான நைஜீரியன் தென்னிந்தியாவில் உள்ள ஹோட்டல்கள், பப்கள், கல்லூரிகளில் போதைப்பொருள்களை விற்பனை செய்வது, போதை பொருள்களை உருவாக்க கற்றுகொடுப்பது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது.
குறிப்பாக இந்த கும்பலுக்கு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் கஞ்சா விற்பனையில் முக்கிய பங்கும் பல்வேறு வழக்கு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ரஷ்யருக்கு 18 ஆண்டுகள் சிறை...!