கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேசிய விசாரணை ஆணையம் சனிக்கிழமை (ஜூன் 12) சோதனை நடத்தியது.
தங்கக் கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான முகமது மன்சூர் அளித்த தகவலின் அடிப்படையில், சாங்லியின் கானாபூர், காவ்தேமஹங்கல், அட்பாடி, தஸ்கான் தெஹ்ஸில் ஆகியவற்றில் தேசிய விசாரணை ஆணையம் சோதனை நடத்தியது.
விசாரணையின்போது, துபாயிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 100 கிலோ தங்கத்தை சாங்லிக்கு அனுப்பியதாக மன்சூர் ஒப்புக்கொண்டார்.
2020 ஜூலை 5 ஆம் தேதி, திருச்சந்திரம் சர்வதேச விமான நிலையத்தின் ஏர் கார்கோவில், கொச்சின் சுங்க (தடுப்பு) கமிஷனரேட், கொச்சினின் ஏர் கார்கோவில், 14.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை ஜூலை 10, 2020 அன்று பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட 20 பேர் மீது இந்தாண்டு ஜனவரியில் தேசிய விசாரணை ஆணையம் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது.
இதையடுத்து, எர்ணாகுளத்திலுள்ள தேசிய விசாரணை ஆணைய சிறப்பு நீதிமன்றம் மன்சூருக்கு எதிராக கைது செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், கொச்சியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஐந்து நாள்கள் விசாரணை ஆணையம் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.