தெலங்கானா (ஹைதராபாத்): ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டெய்லர் கன்ஹைய லால் என்பவர் கடந்த ஜூன் 28ஆம் தேதி இரண்டு பேரால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் சம்பவத்தை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொலையாளிகள் ரியாஸ், முகமது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. கொலைக்கு பின்னணியில் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பிருப்பதாக தேசிய புலனாய்வு முகமை கூறியிருந்தது. இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக கிடைத்த தகவலின்படி ஹைதராபாத்தில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தொடர்பு இருப்பதாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, என்ஐஏ அலுவலர்கள் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹைதராபாத்தின் சந்தோஷ் நகரில் இருந்த அந்த நபரை என்ஐஏ அலுவலர்கள் பிடித்து, மாதப்பூரில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'உதய்பூர் கொலை: பயங்கரவாத அமைப்புக்குத்தொடர்பில்லை...ஆனால்':என்ஐஏ புதிய தகவல்!