அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 16 நபர்கள் மீது தேசிய புலணாய்வு முகமை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்திய குற்றவியல் (இ.பி.கோ) பல்வேறு சட்டங்கள் மற்றும் UAPA சட்டங்களில் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் இவர்கள் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களது சொத்துக்களை முடக்கி, இந்தியா கொண்டுவர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேளாண் சட்டத்தை திரும்பப் பெற குடியரசு தலைவர்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் கோரிக்கை