ETV Bharat / bharat

பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ. 2,000 கோடி அபராதம்... ஏன் தெரியுமா..? - Punjab for failure to treat waste

பஞ்சாப் மாநிலத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ.2 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ. 2,000 கோடி அபராதம்

author img

By

Published : Sep 23, 2022, 6:09 PM IST

டெல்லி: பஞ்சாப் மாநில அரசு திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மையை முறையாக நிர்வகிக்கவில்லை. அதன் காரணமாக மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மாசுபாட்டைக் கட்டுப்படுத்த விரிவான திட்டத்தை வைத்திருப்பது அரசின் முக்கிய பொறுப்பாகும். சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை உடல் நலப் பிரச்சினைகள் காத்திருக்காது. மாநில பட்ஜெட் ஒதுக்கீட்டில் பற்றாக்குறை இருந்தால், செலவுகளைக் குறைத்து பொருத்தமான கழிவு மேலாண்மைக்கு திட்டமிடல் செய்ய வேண்டும்.

இதையெல்லாம் பஞ்சாப் அரசு செய்ய தவறிவிட்டது. ஆகவே, பஞ்சாப் அரசுக்கு ரூ.2,180 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இதனிடையே பஞ்சாப் அரசு தீர்ப்பாயத்திடம் ரூ.100 கோடி அபராதத்தை டெபாசிட் செய்துள்ளது. மீதமுள்ள ரூ.2,080 கோடியை 2 மாதங்களுக்குள் டெபாசிட் செய்ய உள்ளது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் தனியார் தொழிற்சாலை கழிவுநீரால் சட்லஜ் மற்றும் பியாஸ் ஆறுகளில் மாசுபாடு ஏற்பட்டதால் ரூ.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.