ETV Bharat / bharat

Twitter logo: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்சில் ட்விட்டர் லோகோ மாற்றம்! நீல பறவைக்கு விடுதலை!

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளிலும் நீல பறவைக்கு பதிலாக X சின்னம் ட்விட்டர் லோகோவாக மாற்றப்பட்டு உள்ளது.

X logo
X logo
author img

By

Published : Jul 31, 2023, 3:17 PM IST

சான் பிரான்சிஸ்கோ : ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளிலும் நீல பறவைக்கு பதிலாக X சின்னம் ட்விட்டர் லோகோவாக மாற்றப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு 44 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். அது முதலே ட்விட்டரில் அவர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். பாதிக்கும் மேற்பட்ட ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூ டிக் பெற பயனர்கள் 8 டாலர் மாத சந்தா செலுத்த வேண்டும், நாளொன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்வீட் போட மற்றும் மற்றவர்களின் ட்வீட்டுகளை பார்க்கக்கு வரம்பு நிர்ணயம் என பல்வேறு கட்டுப்பாடுகளை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார்.

இதனிடையே எலான் மஸ்கிற்கு போட்டியாக, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும், ட்விட்டருக்கு பதில் திரட்ஸ் என்ற சமூகவலைதளத்தை அறிமுகப்படுத்தியது. தொடங்கிய சில நாட்களிலேயே 15 மில்லியனுக்கு அதிகமான பயனர்கள் இணைந்ததாக திரட்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

திரட்ஸ்க்கு போட்டியாக ட்விட்டரிலும் எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். முதற்கட்டமாக ட்விட்டரின் லோகோவான நீல பறைவைக்கு பதிலாக, X என்ற சின்னத்தை லோகோவாக அறிமுகப்படுத்தினார். முதற்கட்டமாக வலைதள பதிப்புகளில் மட்டும் X லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளிலும் ட்விட்டர் லோகோ மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ட்விட்டரின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளில் நீல நிற பறவை லோகோவாக இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக X லோகோவாக மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூலை 23ஆம் தேதி, எலான் மஸ்க் தன் ட்விட்டர் பக்கத்தில், "வெளிப்படையான மற்றும் நேர்மறையான கருத்துகளை விரும்புவதாகவும், விரைவில் ட்விட்டர் பிரண்ட் மற்றும் அனைத்து பறவைகளுக்கு விடைபெறும்" என்று பதிவிட்டு இருந்தார். மேலும், "நல்ல மற்றும் போதுமான X லோகோ இன்று இரவு முதல் வெளியிடப்பட்டால், நாளை உலகம் முழுவதும் நேரலை செய்வோம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ட்விட்டரின் தலைமையகமான சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் பிரம்மாண்ட X லோகோ காட்சிப்படுத்தப்பட்டது. இரவில் விண்ணை முட்டும் அளவுக்கு அதில் இருந்து வெளிச்சம் வெளியேறிய நிலையில், அதனால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக ட்விட்டர் தலைமையகத்தின் அருகில் குடியிருந்த மக்கள் புகார் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஓடும் ரயிலில் ஆர்பிஎப்(RPF) வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர், 3 பயணிகள் பலி!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.