புதுச்சேரி : முதலமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்ற பின்பு முதியோர், விதவைகள், திருநங்கைகள், கணவரால் கைவிடப்பட்டோர் ஆகிய பயனாளிகளுக்கு ஏற்கனவே வாங்கிய உதவித் தொகையை விட கூடுதலாக 500 ரூபாயும் புதிதாக 10 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.
அதன்படி கூடுதலாக உயர்த்தப்பட்ட 500 ரூபாய் தொகையானது ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து பயனாளிகளுக்கும் வயதுக்கேற்ப வழங்கப்படவுள்ளது. இதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள்.
கூடுதலாக உதவித்தொகை பெறுபவர்கள்
தற்போது 10 ஆயிரம் பயனாளிகள் கூடுதலாக இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. குறிப்பாக 18 வயது முதல் 54 வயது வரை உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், திருநங்கைகளுக்கு ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாகவும், 55 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு ஆயிரத்து 500 இருந்து 2 ஆயிரம் ரூபாயாகவும், 60 வயது முதல் 79 வயது வரை உள்ளவர்களுக்கு இரண்டாயிரத்தில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், 80 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 3ஆயிரத்து 500 ரூபாயாகவும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான திட்டத்தை சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனி ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதையும் படிங்க: பெகாஸஸை ஒன்றிய அரசு வாங்கியதா? இல்லையா? - ராகுல் கேள்வி