ETV Bharat / bharat

"காங்கிரஸில் எனது பணி என்னவென்று புதிய தலைவர் தான் தீர்மானிப்பார்" - ராகுல் காந்தி!

author img

By

Published : Oct 19, 2022, 4:49 PM IST

காங்கிரஸில் எனது பணி மற்றும் பங்களிப்பு என்ன? என்பதை புதிய தலைவர் தான் தீர்மானிப்பார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

New
New

ஆதோனி(ஆந்திரா): காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆந்திராவில் பாரத் ஜோடா யாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தியிடம் புதிய தலைவர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், "காங்கிரஸில் எனது பங்கு என்ன? நான் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? என்பது குறித்து புதிய தலைவர் தான் முடிவு செய்வார். காங்கிரஸில் தலைவருக்குத்தான் உச்ச அதிகாரம் உள்ளது.

அதனால் கட்சியில் உள்ள அனைவரும் எல்லாவற்றையும் அவரிடம்தான் முறையிட வேண்டும். அந்த வகையில் என்னுடைய பணி என்ன? என்பதை தலைவர் முடிவு செய்வார் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

கார்கேவும், தரூரும் போதிய அனுபவமும் புரிதலும் உள்ளவர்கள். அவர்களுக்கு எனது ஆலோசனை தேவையில்லை. தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்கள் குறித்து, எங்கள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்" என்றார்.

இதையும் படிங்க: பட்டியலின முகமான கார்கேவுக்கு தாமதமாக அங்கீகாரம் தந்த காங்கிரஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.