டெல்லி: ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக மும்பையைச் சேர்ந்த மாடல் ஒருவர் கடந்த 2013ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு குறித்து அறிந்து கொண்ட தேசிய மகளிர் ஆணையம், ஹேமந்த் சோரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2013ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த மாடல் ஒருவரை ஹேமந்த் சோரனும், சுரேஷ் நாக்ரேவும் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அது தொடர்பாக பொது வெளியில் பேசக்கூடாது என அந்தப் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
#JusticeforAyesha
— Kanak Shukla। 👸 (@kanakShukla_) December 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
She has been appealing for police protection since 2013. The rape accused @HemantSorenJMM used immense political power to divert the same issue.
- The written letter of victim attached.@dprakashbjp @nishikant_dubey @yourBabulal @idharampalsingh @BJP4Jharkhand pic.twitter.com/0bGtTdKWtS
">#JusticeforAyesha
— Kanak Shukla। 👸 (@kanakShukla_) December 15, 2020
She has been appealing for police protection since 2013. The rape accused @HemantSorenJMM used immense political power to divert the same issue.
- The written letter of victim attached.@dprakashbjp @nishikant_dubey @yourBabulal @idharampalsingh @BJP4Jharkhand pic.twitter.com/0bGtTdKWtS#JusticeforAyesha
— Kanak Shukla। 👸 (@kanakShukla_) December 15, 2020
She has been appealing for police protection since 2013. The rape accused @HemantSorenJMM used immense political power to divert the same issue.
- The written letter of victim attached.@dprakashbjp @nishikant_dubey @yourBabulal @idharampalsingh @BJP4Jharkhand pic.twitter.com/0bGtTdKWtS
தனக்கு காவல் துறை பாதுகாப்புக்கோரி, பாதிக்கப்பட்ட பெண் எழுதியதாக கூறப்படும் கடிதத்தையும் 2013ஆம் ஆண்டு முதல், 2020வரை அப்பெண்ணுக்கு நிகழ்ந்த சம்பவங்களையம் தேசிய மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது.
சமீபத்தில் பாதிக்கப்பட்ட அப்பெண், ஹேமந்த் சோரன் தன்னை ஒரு விலங்கு போல பாலியல் வன்புணர்வு செய்தார் எனவும்; தனக்கு மரண அச்சுறுத்தல் உள்ளது எனவும் குற்றம்சாட்டினார். மேலும் அவர் காவல் துறை பாதுகாப்புக்கோரும் கடிதம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹத்ராஸ் வழக்கு: 4 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்