மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் திடீரென கடுமையான வயிற்று வலியால் அவதியுற்றார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள பீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சரத் பவார் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்தார்.
மேலும், “80 வயதான சரத் பவார் கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அவருக்கு பித்தப்பையில் சிக்கல் இருப்பது தெரியவந்துள்ளது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து, “சரத் பவார் வருகிற புதன்கிழமை (மார்ச் 31) மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார், அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னர் எண்டோஸ்கோபி செய்யப்படும்” என்றும் மாலிக் தெரிவித்தார். இதற்கிடையில் சரத் பவாரின் அனைத்து திட்டமிடப்பட்ட பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் சரத் பவார் சூறாவளி சுற்றுப்பயணம் ரத்தாகுமா?