ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகவே காவலர்களையும், காவலர்களுக்கு நக்சல்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களையும் எச்சரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்தன. இந்த போஸ்டர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பான மாவோயிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட்டால் ஒட்டப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் தேதி நடுத்தர வயதுடைய ஜாகீர் பகாத் என்பவர் லோகர்டாகா பகுதியில் நக்சல்களால் கொல்லப்பட்டார். இவர் நக்சல்கள் குறித்து காவலர்களுக்கு துப்பு கொடுத்த காரணத்தால் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
லோகர்டாகா, மேற்கு சிங்பகும், கிரிதிக், ராஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சல்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் காவல்துறையினருக்கு தங்களை குறித்து துப்பு கொடுக்கும் நபர்களை எச்சரிக்கும் வசனங்கள் இருந்தன. அதுமட்டுமின்றி, நக்சல்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சிறப்பு காவலர்களைக் கொல்லவும் அறிவுறுத்தியுள்ளனர்.
கிடைத்த தகவலின்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் நான்காயிரத்து 500 சிறப்புக் காவலர்கள் இருப்பதாகத் தெரிகிறது. இவர்கள் நக்சல்களின் வங்கிக் கணக்குகள், அவர்களது நடவடிக்கைகள் குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தீபாவளி பரிசாக நக்சல் பெண்களுக்கு இலவச நாப்கின்கள்!