பஞ்சாப்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய சித்துவை சமாதானம் செய்யும் முயற்சியில் அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தீவிரம் காட்டி வருகிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் மேலிட அழுத்தம் காரணமாக அமரீந்தர் சிங் பதவி விலகினார்.
இதனையடுத்து சித்துவின் ஆதரவாளர்களும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இந்நிலையில் முதலமைச்சராக பதவியேற்ற சரண்ஜித் சிங் சன்னியை சித்து சந்தித்துள்ளார். சித்து ராஜினாமாவை திரும்ப பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: 'காங்கிரஸிற்கு கல்தா, பாஜகவுக்கு நோ'- அமரீந்தர் சீக்ரெட்!