பிகார் மாநில ஆளுநர் பாகு சவுகான் இன்று (டிச.31) மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. மேலும், ஆளுநர் பாகு சவுகான் டெல்லியில் இரண்டு நாள்கள் தங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஆளுநர் பாகு சவுகான் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ராஷ்ட்ரபதி பவனில் சந்திக்கவுள்ளார். அங்கு கல்வித்துறை தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை நாளை (ஜன.01) காலை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், பாகு சவுகான் நாளை மாலை டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு புறப்படவுள்ளார்.
இதையும் படிங்க: ராஜ்கோட்டில் அமைவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல்