ETV Bharat / bharat

புதுச்சேரியில் நாங்க தான் பாஸ்; திமுகவுக்கு செக் வைக்கும் நாராயணசாமி

புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் போராட்டங்களுக்கு காங்கிரஸ்தான் தலைமை ஏற்கும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளர்.

புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை- நாராயணசாமி

author img

By

Published : Dec 4, 2022, 10:39 PM IST

புதுச்சேரி: தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுகின்றன. இந்த கூட்டணிக்கு தமிழ்நாட்டில் திமுகவும், புதுச்சேரியில் காங்கிரஸும் தலைமை ஏற்கும் என கூட்டணி உடன்படிக்கையில் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் மட்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில் புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடக்கும் போராட்டங்கள் திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றதாக அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வருவதாகவும்; காங்கிரஸ் கட்சியினரை, திமுகவினர் மதிப்பதில்லை எனவும் கடந்த வாரம் தனியார் விடுதியில் நடைபெற்ற புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்போது செய்தியாளர்கள் கேட்டதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மெளனம் காத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதில், ’அனைத்து தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்றுள்ளனர். புதுச்சேரி முழுவதும் திமுக வலுவான இயக்கமாக மாறி உள்ளது. நாங்கள் கட்சியை வளர்க்கிறோம். திமுக தலைவர் பெயரை சொல்லியும், கொள்கையை சொல்லியும் கட்சி நடத்துகிறோம். தமிழ்நாட்டில் நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்து புதுச்சேரி மக்களிடம் சொல்லி பணியாற்றி வருகிறோம். இது புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினருக்கு கஷ்டமாக இருக்கலாம்.

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை - நாராயணசாமி

காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு தலைமை தாங்க முடியாது. எதிர்க்கட்சியாக திமுக தான் உள்ளது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, 'புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு திமுக தலைமை ஏற்றதாக செய்திகளில் வந்துள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு காங்கிரஸ் மட்டுமே தலைமை ஏற்கும். காங்கிரஸ் தலைமை ஏற்கவில்லை என்றால் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்ததுள்ளர்.

இதையும் படிங்க:மானஸ சஞ்சரரே....தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவுக்கு நடப்பட்ட பந்தகால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.