ETV Bharat / bharat

நாகர்கோவில் - கச்சிகுடா வாராந்திர சிறப்பு ரயில்... டிக்கெட் புக்கிங் துவக்கம்! - Southern Railway news in tamil

நாகர்கோவில் - கச்சிகுடா வாராந்திர சிறப்பு ரயில் சேவை மே 26 முதல் ஜூலை 2 வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாகர்கோவில் - கச்சிகுடா வாராந்திர சிறப்பு ரயில் சேவைக்கான முன்பதிவு தொடக்கம்

author img

By

Published : May 20, 2023, 11:01 AM IST

ஹைதராபாத்: தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் இருந்து தெலங்கானா மாநிலத்தின் கச்சிகுடா வரையில் வாராந்திர ரயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. வண்டி எண் 16354 கொண்ட கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாகர்கோவிலில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.20 மணிக்கு கச்சிகுடா வந்தடையும்.

அதேபோல், மறுமார்க்கமாக 16353 என்ற எண் கொண்ட நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கச்சிகுடாவில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (திங்கள் கிழமை) இரவு 7.50 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். இந்த நிலையில், நாகர்கோவில் - காச்சிகுடா இடையே வாராந்திர அடிப்படையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குவதாக அறிவித்து உள்ளது.

வருகிற 26ஆம் தேதி முதல் ஜூலை 2ஆம் தேதி வரை நாகர்கோவில் - கச்சிகுடா வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், 07436 என்ற எண் கொண்ட நாகர்கோவில் - கச்சிகுடா வாராந்திர சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து வருகிற 28, ஜூன் 4, 11, 18, 25 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (திங்கள்கிழமை) காலை 6.30 மணிக்கு கச்சிகுடா வந்தடையும்.

அதேபோல், மறுமார்க்கமாக கச்சிகுடா - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 07435), வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில், அதாவது வருகிற 26, ஜூன் 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கச்சிகுடாவில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கல் மற்றும் குண்டூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று கச்சிகுடா வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று (மே 20) முதல் தொடங்குகிறது.

இதன்படி நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலி (அதிகாலை 2 மணி), கோவில்பட்டி (அதிகாலை 2.53 மணி), சாத்தூர் (அதிகாலை 3.13 மணி), விருதுநகர் (அதிகாலை 3.38 மணி), மதுரை (அதிகாலை 4.15 மணி), திண்டுக்கல் (காலை 5.25 மணி), திருச்சி (காலை 7.40 மணி), ஸ்ரீரங்கம் (காலை 8.23 மணி), விருத்தாசலம் (காலை 9.48 மணி), விழுப்புரம் (காலை 10.25 மணி), திருவண்ணாமலை (காலை 11.38 மணி), வேலூர் (மதியம் 1.20 மணி), காட்பாடி (மதியம் 1.35 மணி), ரேணிகுண்டா (மாலை 4.25 மணி), நெல்லூர் (மாலை 6.40 மணி), ஓங்கல் (இரவு 8.10 மணி), குண்டூர் (இரவு 10.43 மணி) வழியாக கச்சிகுடா ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

அதேபோல், மறுமார்க்கமாக கச்சிகுடா ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் குண்டூர் (அதிகாலை 12.45 மணி), ஓங்கல் (அதிகாலை 3.18 மணி), நெல்லூர் (காலை 5 மணி), ரேணிகுண்டா (காலை 5.40 மணி), காட்பாடி (காலை 9.20 மணி), வேலூர் (காலை 9.43 மணி), திருவண்ணாமலை (காலை 10.43 மணி), விழுப்புரம் (பகல் 12.25 மணி), விருத்தாசலம் (மதியம் 1.15 மணி), ஸ்ரீரங்கம் (பிற்பகல் 2.28 மணி), திருச்சி (பிற்பகல் 3 மணி), திண்டுக்கல் (மாலை 4.40 மணி), மதுரை (மாலை 6 மணி), விருதுநகர் (மாலை 6.45 மணி), சாத்தூர் (இரவு 7.13 மணி), கோவில்பட்டி (இரவு 7.35 மணி), திருநெல்வேலி(இரவு 9.05 மணி) வழியாக நாகர்கோவிலுக்கு வந்தடையும்.

இதையும் படிங்க: தென்மாவட்ட ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.