ETV Bharat / bharat

மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! - Megahalya State Assembley Election

மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

சட்டசபை தேர்தல்
சட்டசபை தேர்தல்
author img

By

Published : Feb 27, 2023, 7:36 AM IST

சில்லாங்: 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் முன்னாள் உள்துறை அமைச்சர் லிங்டோவின் உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கான தேர்தல் மட்டும் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து ஆளும் தேசிய மக்கள் கட்சி தனித்து தேர்தலை சந்திக்கிறது. முதல் அமைச்சர் கன்ராட் சங்மா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மறுபுறம் பாஜக தனித்து ஆட்சியை பிடிக்க தீவிரமாக முன்னைப்பு காட்டி வருகிறது.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்க்ள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இன்னொரு புறம் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியில் தேர்தல் ரேசில் ஓடி வருகின்றன. பிரசாரம் கடந்த 25ஆம் தேதி ஓய்ந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இதற்காக 3 ஆயிரத்து 419 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 21 லட்சத்து 4 ஆயிரம் மக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு 19 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய பகுதிகளில் துணை ராணுவ வீரர்கள், போலீசார் தீவிர கணகாணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். மற்றொரு வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 60 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கியது.

ஏறத்தாழ 13 லட்சத்து 17 ஆயிரம் பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகள் தயார் நிலையயில் உள்ளன. தேர்தலை முன்னிட்டு போலீசார், பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: தொடங்கியது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.