கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் முத்தூட் பின்கார்ப் தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று(ஜன.23) காலை அடையாளம் தெரியாத கும்பல் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் பிடிபட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களை பிடித்துள்ள ஹைதராபாத் காவல்துறையினர், தங்கம் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக சைபராபாத் காவல் ஆணையர் இன்று (ஜனவரி 23) மாலை செய்தியாளர்கள் சந்திப்பு மேற்கொள்வார் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக, நேற்று (ஜனவரி 22) ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் போல் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அலுவலகத்தில் நுழைந்து துப்பாக்கியை காட்டி அங்கு பணியிலிருந்த நான்கு பேரை கட்டி போட்டனர். பின்னர் அவர்களிடமிருந்து சாவியை பெற்றுக்கொண்டு அலுவலகத்தில் இருந்த 7 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 25 ஆயிரத்து 91 கிராம் தங்க நகை, 90 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்தனர். இவர்களை பிடிக்க 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'கணக்கில் காட்டாத ரூ.120 கோடி முதலீடு' - விசாரணைக்கு ஆஜராக பால் தினகரனுக்கு சம்மன்!