ETV Bharat / bharat

முத்தலாக் தடை சட்டம் 2ஆம் ஆண்டு நிறைவு: ஆக.01 இனி ’இஸ்லாமிய பெண்கள் உரிமை நாள்’

முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி இனி நாடு முழுவதும் ’இஸ்லாமிய பெண்கள் உரிமை நாளாக’ கடைபிடிக்கப்படும் என ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author img

By

Published : Aug 1, 2021, 8:00 AM IST

இது குறித்து ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முத்தலாக் சட்டத்திற்கு எதிராக அரசு சட்டம் இயற்றியது. இதன் மூலம் முத்தலாக் எனும் சமூக குற்றம் சட்டப்ப்பூர்வமாக கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டது.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு முத்தலாக் வழக்குகளில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய பெண்கள் இந்தச் சட்டத்தை பெரிதும் வரவேற்றுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

மேலும், ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோருடன், நாளை (ஆக.02) புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இஸ்லாமிய பெண்கள் உரிமை நாளை நக்வி கொண்டாடுவார் என்றும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் இஸ்லாமிய பெண்களின் தன்னம்பிக்கை, சுயமரியாதை, தன்னம்பிக்கையை அரசு வலுப்படுத்தியுள்ளது என்றும், முத்தலாக் சட்டத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வந்து அவர்களின் அரசியலமைப்பு, அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளை அரசு பாதுகாத்துள்ளது என்றும் நக்வி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: EXCLUSIVE INTERVIEW: உட்கட்சிப் பூசல் ஜனநாயகத்தின் அடையாளம் - சசிகாந்த் செந்தில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.