ETV Bharat / bharat

மதத்தைக் கடந்த மனிதநேயம்: மூதாட்டிக்கு இஸ்லாமிய சகோதரர்கள் இறுதிச்சடங்கு! - இஸ்லாமியச் சகோதரர்கள்

காஷ்மீர்: பாண்டிபோராவில் இந்து மதத்தைச் சேர்ந்த மூதாட்டிக்கு இஸ்லாமிய சகோதரர்கள் இறுதிச்சடங்கை நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Muslim
மனிதநேயம்
author img

By

Published : Jun 5, 2021, 9:58 AM IST

காஷ்மீர் பாண்டிபோராவில் அஜார் பகுதியில் வசித்துவந்த மூதாட்டி ரத்தன் ராணி பட், கடந்த வியாழக்கிழமை இரவு வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். வீட்டில் வேறு யாரும் இல்லாததால், செய்வதறியாமல் அவரது மகன் திகைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, உடனடியாக அவரது வீட்டருகே வசித்துவரும் இஸ்லாமிய சகோதரர்கள் ஒன்றுதிரண்டு இந்து முறைப்படி இறுதிச்சடங்கை நடத்தினர். அவரைத் தோளில் சுமந்தபடியே மயானத்திற்குக் கொண்டுசென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மூதாட்டிக்கு இஸ்லாமிய சகதோரர்கள் இறுதிச்சடங்கு

இது குறித்து அவரது மகன் கூறுகையில், "இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் நாங்கள் இருந்தாலும், ஒருபோதும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரவில்லை.

இங்கிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். பல ஆண்டுகளாகக் காஷ்மீரில் வாழ்ந்துவருகிறோம். எங்களிடையே அமைதியும் சகோதரத்துவமும் உள்ளது" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.