மும்பையிலுள்ள பாண்டம் பிலிம் ஜோகேஸ்வரி அலுவலகம், இயக்குனர் அனுராக் காஷ்யப் வசிக்கும் ஓஷிவாரா பகுதியிலுள்ள வீடு மற்றும் நடிகை டாப்ஸி பன்னு வசிக்கும் கோரேகான் பகுதியில் உள்ள வீடு ஆகியவைகளில் வருமான வரித்துறையினர் சோதனைநடத்தினர்.
2011 ஆம் ஆண்டில், அனுராக் காஷ்யப், மது வர்மா மொன்டானா, விக்ரமாதித்யா மோட்வானே, மற்றும் விகாஸ் பெஹ்ல் ஆகியோர் பாண்டம் திரைப்படத்தை இணைந்து நிறுவினர். இந்நிலையில், அக்டோபர் 2018 இல், பாண்டம் திரைப்பட நிறுவனம் மூடப்பட்டது.
அனுராக் காஷ்யப் எப்போதும் தனது சமூக ஊடகங்களில் மத்திய அரசை விமர்சித்து வருகிறார். உழவர் இயக்கத்திற்கு, நடிகை டாப்ஸி பன்னு, சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவித்திருந்தார். இதற்கிடையில், மும்பையில் உள்ள அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸி பன்னு வீடுகளில் சோதனை நடைபெற்றுள்ளது.
இந்தச் சோதனையின்போது என்னென்ன கைப்பற்றப்பட்ட என்பது குறித்து வருமான வரித்துறை அலுவலர்கள் இதுவரை எந்தத் தகவலும் வெளியிடவில்லை. இந்நிலையில், இது தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரிக்கப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: மன்னிப்பு கடிதம் கொடுக்காத மக்கள் போராளி - புலவர் கலியபெருமாள்