ETV Bharat / bharat

'மாஸ்க் போடுங்கப்பா' பொதுமக்களிடம் மும்பை மேயர் அறிவுரை! - மும்பை கரோனா பாதிப்பு

மும்பை: சாலைகள், ரயில்களில் மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிபவர்களிடம் மேயர் கிஷோரி பெட்னேகர் கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றும்படி அறிவுரை வழங்கினார்.

கிஷோரி பெட்னேகர்
மும்பை மேயர்
author img

By

Published : Feb 18, 2021, 7:06 AM IST

கரோனா நெறிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து மும்பை மற்றொரு பொதுமுடக்கத்தைச் சந்திக்கும் என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குறைந்தபாடில்லை. ஆனால், மக்கள் பலரும் மாஸ்க் இல்லாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் சுற்றித்திரிகின்றனர். இதுகுறித்து மும்பை மேயரும், சுகாதாரத் துறையினரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், சில அரசு அலுவலர்களுடன் இணைந்து பைக்குல்லாவிலிருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (சி.எஸ்.எம்.டி) செல்லும் புறநகர் ரயிலில் பயணித்தார். அங்கு முகக்கவசம் இல்லாமல் பயணிப்போருக்கு அறிவுரை வழங்கினர்.

பின்னர் கடைகளுக்குச் சென்ற மேயர், விற்பனையாளர்களை மாஸ்க் அணியும்படி வற்புறுத்தியது மட்டுமின்றி கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் வற்புறுத்துமாறு தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், " கரோனா நெறிமுறைகளான மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றை 60 விழுக்காடு மக்கள் பின்பற்றவில்லை. ரயில்களில் பெரும்பாலானோர் மாஸ்க் அணியவில்லை. மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருவது மக்கள் கையில்தான் உள்ளது. கரோனா ஆபத்து இன்னும் குறையவில்லை. மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் பல நகரங்களில், மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிபவர்களிடம் சுகாதாரத் துறையினர் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்னும் கோவிட்-19 ஓயவில்லை அதீத நம்பிக்கை ஆபத்தானது - எச்சரிக்கும் ராகுல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.