மும்பை: மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், கோவிட்-19 நெருக்கடியைச் சமாளிப்பதில் காட்டிய விடாமுயற்சி 'வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் லண்டனால்’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, கிஷோரி கோவிட் வார்டுக்குச் சென்ற போது செவிலியர் உடையில் சென்று, மக்கள் மத்தியில் ஒரு மறக்க முடியாத முத்திரையைப் பதித்தார்.
அவரின் இந்தச் செயலுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 'வேல்ர்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் லண்டன்' கோப்பையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கியுள்ளது.
அதன் தலைவர், ஃபரா சுல்தான் அகமது, இந்தப் பரிசுகளை கிஷோரிக்கு வழங்கினார். "கோவிட் காலத்தில் அவரது பணி நெறிமுறைகள் மற்றும் உற்சாகத்தால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம். அவரது பணியினை அங்கீகரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்" என சுல்தான் அகமது தெரிவித்தார்.
அடிப்படையில் செவிலியான கிஷோரி, கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டும், கரோனா தொற்று நோயாளிகளுக்கு சேவை செய்வதில் உறுதியுடன் இருந்தார். பெட்னேகர் மும்பையின் ஏழாவது பெண் மேயர் ஆவார். மக்களிடம் இரண்டறக் கலந்திருக்கும் இந்த மேயர் மீது மும்பை குடியிருப்புவாசிகளுக்கு எப்போதும் ஒரு பிரமிப்பு உண்டு.
இதையும் படிங்க: காஷ்மீர்: 15 ரயில் நிலையங்களில் ஒருங்கிணைந்த ஒய்-ஃபை சேவை!