ரமலான் பண்டிகையைப் போலவே, பிறை தெரிவதையொட்டி இஸ்லாமியர்களால் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை இன்று (ஆகஸ்ட்.20) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது.
![Muharram 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12824569_sdasd.png)
மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் மொஹரமும் ஒன்று.
![Muharram 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12824569_moha.png)
இந்நாளில், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் அன்பின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளத்திலும் இணையவாசிகள் மொஹரம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்றைய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு #ETV Bharat News Today