ETV Bharat / bharat

டெல்லி திமுக விழாவில் மாயமான தமிழச்சி தங்கப்பாண்டியனின் செல்போன் - டெல்லி திமுக விழாவில் திருட்டா

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழாவின்போது, தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் செல்போன் காணாமல் போனது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thamizhachi Thangapandian Mobile Missed
Thamizhachi Thangapandian Mobile Missed
author img

By

Published : Apr 3, 2022, 6:57 AM IST

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குறைந்தது ஏழு எம்பிக்களை கொண்ட கட்சிகளுக்கு அலுவலகம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டிலேயே திமுகவுக்கு இடம் ஒதுக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு தான் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. சில வாரங்களுக்கு முன்னர் இதன் அனைத்து கட்டுமான பணிகளும் நிறைவடைந்தன.

நவீன வசதிகளுடன் 3 மாடி கட்டடம்: டெல்லியில் அமைந்துள்ள திமுக அலுவலகமான, அண்ணா - கலைஞர் அறிவாலயம் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. தரை தளத்தில் கட்சி கூட்டங்களை நடத்துவதற்காகப் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்திலும், 2ஆம் தளத்திலும் நவீன வசதிகளுடன் கூடிய கருத்தரங்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து 3ஆவது தளத்தில் எம்.பி.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி நூலகம், செய்தியாளர்களுக்குத் தனி அறைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஏப். 2) மாலை 5 மணியளவில் திறந்துவைத்தார். முன்னதாக, திமுக அலுவலக வளாகத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளும் திறந்துவைக்கப்பட்டன. அண்ணா சிலையை திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனும், கருணாநிதி சிலையே திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு திறந்து வைத்தார்.

தலைவர்கள் பங்கேற்பு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும், திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

திமுக அலுவலக திறப்பு விழாவில் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியனும் கலந்துகொண்ட நிலையில், அவரது கைபையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்ஃபோன் காணாமல் போனது. செல்போனை திருட்டு போனதா அல்லது தமிழச்சி தங்கப்பாண்டியன் வேறு இடத்தில் எங்காவது மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்லியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.