மத்திய பிரதேசம்: விதிஷா மாவட்டத்தில் உள்ள குர்வாய் சிஎம் ரைஸ் பள்ளியில், அரசால் வழங்கப்பட்ட பழுது பார்க்கும் பணத்தில் பள்ளி வளாகத்திற்குள் மசார்(சமாதி) கட்டியது தொடர்பாக அப்பள்ளியின் முதல்வரை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் தற்போது சிம் ரைஸ் பள்ளி என்ற திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளியை சீரமைக்க நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அந்த பணத்தில் குர்வாய் அரசுப்பள்ளியான சிம் ரைஸ் பள்ளியின் தலைமை ஆசிரியை ஷைனா ஃபிர்தௌஸ்ஒரு மசார் (சமாதி) கட்டியுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாநில பொதுக் கல்வி ஆணையர் அபய் வர்மா நடிவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக சிஎம் ரைஸ் பள்ளி திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்காக இந்த பள்ளியை மாநில அரசு சமீபத்தில் தேர்வு செய்தது. இதற்காக வழங்கப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்திய தகவலும் தற்போது வெளியாகி உள்ளதையடுத்து இச்சம்பவம் அம்மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஷைனா ஃபிர்தௌஸ் பள்ளி வளாகத்தில் அரசு செலவில் மசார் கட்டியது மட்டுமல்லாமல், இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை நடத்தியுள்ளார். மேலும் முஸ்லிம் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது போன்ற புகார்களும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. பின்னர் தலைமை ஆசிரியர் மீது பள்ளி ஆசிரியர்கள் புகார் அளித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் ரகசிய விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என தெரியவந்தது.
அதிகாரிகளின் அலட்சியம் அம்பலமானது: இப்பள்ளியில் மசார்(சமாதி) கட்டுவது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட கல்வித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்துள்ளனர். மேலும் இதன் விசாரணை குறித்த அறிக்கை இணை இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. பின்னர் மாவட்ட கல்வி அதிகாரி அதுல் முத்கல் அப்பள்ளி தலைமை ஆசிரியை ஷனாவை பதரி மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்துள்ளார்.
சமாதியை அகற்ற அம்மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அணையத்தின் தலைவர் பிரியங்க் கனுங்கோ பள்ளி வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகள் நீண்ட காலமாக தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பள்ளி சீரமைப்பு தொகையை தலைமை ஆசிரியை திருப்பி செலுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:மும்பையில் ரூ.120 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. முன்னாள் ஏர் இந்தியா விமானி கைது