போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தெருக்களில் வசிக்கும் பெண்களை, இருவர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக தொடர் புகார்கள் எழுந்துவந்தன.
இதையடுத்து, தேவாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள் மாறுவேடத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, அத்தெருக்களில் பெண்கள் நடமாடுவதே கடினமாக இருந்தது என அவர்கள் கூறினர்.
பெண்கள் மீது நடத்தப்படும் இத்தகைய பாலியல் துன்புறுத்தல்களைக் களைய முன் மாதிரியாக செயல்படவேண்டும் என எண்ணிய இரண்டு பெண் காவலர்களும், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இருவரையும் மக்கள் முன்னிலையில் சிட்-அப் போட வைத்துள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க:சமூகமே நோய்வாய் பட்டிருப்பதை காட்டும், குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள்!