இந்தூர் (மத்திய பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 17ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.9) தொடங்கி வைக்கிறார். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் செயல்களை போற்றும் வகையில் இந்த விழாவில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சிறப்பு விருந்தினர்களாக தென் அமெரிக்காவின் கயானா அதிபர் முகமது இர்பான் அலியும், சுரினாம் அதிபர் சந்திரிகா பர்சாத் சந்தோகியும் கலந்து கொள்கின்றனர். அதோடு 70 வெவ்வேறு நாடுகளில் வாழும் 3,500 வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான குடியேற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 'சுரக்ஷித் ஜாயென், பிரஷிக்ஷித் ஜாயென்' என்ற தலைப்பில் ஒரு நினைவு அஞ்சல் தலைவெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரவாசி பாரதிய திவாஸ் விழாவை முன்னிட்டு, துடிப்பான நகரமான இந்தூருக்கு நாளை, ஜனவரி 9ஆம் தேதி வருவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். உலகளவில் தங்களை மேன்மைப்படுத்திக் கொண்ட நமது புலம்பெயர்ந்தோருடனான தொடர்பை ஆழப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு" எனப் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"திமுக இப்படிப்பட்ட கட்சியா?" எம்எல்ஏ மார்கண்டேயருக்கு எதிராக வலுக்கும் குரல்!