ரத்லம்: மத்தியப் பிரதேசத்தின் ரத்லத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிறந்ததில் இருந்தே அரிதான 'ஓநாய் சிண்ட்ரோம்(Werewolf Syndrome)' நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது உடல் முழுவது முடி வளர்ந்து அவதிப்பட்டு வருகிறார்.
நான்லேடா கிராமத்தைச்சேர்ந்த லலித் படிதார்(17) என்ற மாணவன், 'வேர்உல்ஃப் சிண்ட்ரோம்' அல்லது ஹைபர்டிரிகோசிஸ் எனும் விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் அவரது உடல் முழுவதும் முடி வளர்ந்துள்ளது.
இந்த நிலை மிகவும் அரிதானது, இளம் வயதில் 50 பேருக்கு மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. லலித்தின் உடல் முழுவதும் முடியால் மூடப்பட்டிருக்கும்.
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய லலித் “ சிறுவயதில் என்னை (இந்து தெய்வமான) அனுமனின் அவதாரமாகவே கருதுவார்கள். உடல் முழுவதும் நீளமான முடி இருந்ததால், நான் பிறந்தபோது, டாக்டர் ஷேவ் செய்துவிட்டார் என்று என் பெற்றோர் கூறுவர்.
எனக்கு சுமார் 7 வயது இருக்கும் போது, என் உடல் முழுவதும் முடி வளர ஆரம்பித்ததை கவனித்தேன். சிறிது நேரம் கழித்து நான் அதற்குப் பழகிவிட்டேன். முதலில் நான் வீட்டை விட்டு வெளியே வரும்போது, மக்கள் என் மீது கற்களை எறிவார்கள், குரங்கு, கரடி போன்று நான் கடிக்க வருவேன் என்று குழந்தைகள் பயப்படுவார்கள்.
அதன் பிறகு, எனது பெற்றோர் என்னை மருத்துவரிடம் அழைத்துச்சென்றனர், அங்கு மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளித்தனர். டாக்டர்கள் எனக்கு ஹைபர்டிரிகோசிஸ் இருப்பதாகவும், உலகில் 50 பேர் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்படுவதாகவும் சொன்னார்.
தற்போது இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால், எனக்கு 21 வயதானதும், பிளாஸ்டிக் சர்ஜரிக்கு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர். எனக்கு தொழில்நுட்பம் மற்றும் கணினிகள் மிகவும் பிடிக்கும். நான் சிறந்த யூடியூபர்களில் ஒருவராக மாற வேண்டும் என விரும்புகிறேன். எனது சிகிச்சைக்கு அரசாங்கம் உதவ வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஷ்ரத்தா கொலை போன்று மேலும் ஒரு சம்பவம்!