சிம்லா (இமாச்சலப்பிரதேசம்): இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டம் நன்ஹாரி தாலுகாவில் உள்ள கரங்லா கிராமத்தில் ஷியாம்லால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ப்ரீமா தேவி மற்றும் அவரது மகள் பாப்ளி (25).
இவர்களில் பாப்ளியும் அவரது தாயும் வீட்டில் இருந்தபோது, பாப்ளியை ஹார்னெட்ஸ் (Hornets) என்னும் விஷப்பூச்சி கடித்துள்ளது. இதனைக் கண்ட அவரது தாய், பூச்சியை பாப்ளியின் உடலில் இருந்து எடுக்க முயன்றுள்ளார். அப்போது ப்ரீமா தேவியையும் விஷப்பூச்சி கடித்துள்ளது.
இதனால் பாதிப்படைந்த இருவரையும் கிராம மக்கள் மீட்டு, ஹானேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் சிம்லா மாவட்ட நிர்வாகம் உயிரிழந்த இருவருக்கும் தலா 10,000 ரூபாயை உடனடி நிவாரணமாக வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: 25 ஆண்டுகளாக தொடரும் மர்மம்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு பாம்பு கடி... 5 பேர் உயிரிழப்பு...