ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் 70%-க்கும் மேல் கரோனா பரிசோதனை செய்ய முடிவு - ராஜேஷ் பூஷண்

author img

By

Published : Apr 7, 2021, 6:12 AM IST

டெல்லி: மகாராஷ்டிராவில் 70 விழுக்காட்டுக்கும் மேல் கரோனா பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளோம் என மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் பூஷண்
ராஜேஷ் பூஷண்

இந்தியாவில் கோவிட்-19 தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில் முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது, ​​"தற்போது அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த முடியாது. உலகம் முழுவதும் கரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மிகவும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.

குறிப்பாகத் தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது" என்றார்.

கரோனா பாதிப்பின் மையமாக மாறியுள்ள மகாராஷ்டிராவைப் பற்றி பேசிய ராஜேஷ் பூஷண், "கரோனா பாதிப்பு 58 விழுக்காடு என மகாராஷ்டிராவில் உள்ளது. மொத்த இறப்பு 34 விழுக்காடு எனப் பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களில் மகாராஷ்டிராவில் குறைந்துவரும் ஆர்டி-பிசிஆர் சோதனைகளின் விழுக்காட்டை அதிகரிக்க மாநில அரசுக்கு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.

மகாராஷ்டிராவில் 60 விழுக்காடு மட்டுமே ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. அதனை நாங்கள் 70 விழுக்காட்டுக்கும் மேல் பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 3,645 பேருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.