ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 14 ஆயிரத்து 976 பேர் உள்ளனர். இவர்களை கவுரவிக்கும் விதமாக அக்டோபர் 1 ஆம் தேதியன்று முதியோர் தினத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை ராஜஸ்தான் மாநில தேர்தல் ஆணைய அதிகாரி பிரவீன் குப்தா தெரிவித்தார். இந்த புள்ளிவிவரங்களின்படி, ஜுன்ஜுனு மாவட்டத்தில் அதிகபட்சமாக 100 வயதை கடந்த வாக்காளர்கள் 1,688 பேர் உள்ளனர். மிகக் குறைந்த அளவில் பாரன் மாவட்டத்தில் 73 பேர் உள்ளனர்.
ஜெய்ப்பூரில் 1,126 பேரும், உதய்பூரில் 968 பேரும், பில்வாராவில் 844 பேரும், சிகாரில் 828 பேரும், பாலியில் 820 பேரும் 100 உள்ளனர். குறைந்த எண்ணிக்கையிலான வரிசையில் சுருவில் 96 பேர், டோங்கில் 103 பேர், தோல்பூரில் 121 பேர், ஜெய்சால்மரில் 153 பேரும் உள்ளனர்.
இந்த முதியோர்களுக்கு, பஞ்சாயத்து அலுவலகத்திலோ, பள்ளிக் கட்டடத்திலோ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். விழாவில் கலந்து கொள்ள முடியாதவர்களை, அவ்வாறு வரமுடியாதவர்களை தேர்தல் அதிகாரிகள் அவர்களது இல்லத்துக்குச் சென்று கவுரவிப்பார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்றதற்காக இந்த முதியவர்களை கவுரவிக்கும் விதமாக இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதியோர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் கையெழுத்திட்ட பாராட்டு கடிதம் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை அனுமதித்தால் மோதல்கள் ஏற்படலாம் - உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் மறுஆய்வு மனு