மும்பை: மகாராஷ்டிரா மற்றும் பிகார் மாநிலத்தின் மும்பை, பாட்னா. புனே நகரங்களில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் ரூ. 51 கோடி மதிப்புள்ள 101.7 தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 10 கைது செய்யப்பட்டுள்ளனர். சூடான் நாட்டை சேர்ந்த தங்க கடத்தல் கும்பல் ஒன்று நேபாள எல்லை வழியாக ரூ. 50 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்து.
இதனால் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் மகாராஷ்டிரா மற்றும் பிகார் மாநிலத்தின் மும்பை, பாட்னா, புனே நகரங்களில் "ஆபரேஷன் கோல்டன் டவ்ன்" என்ற அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த வேட்டையில் 3 நகரங்களிலும் இருந்தும் ரூ.51 மதிப்புள்ள 101.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு ரூ.1.35 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி மற்றும் இந்திய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கடத்தல் தொடர்பாக சூடான் நாட்டை சேர்ந்த 7 பேர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தரப்பில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் பெரும்பாலும் பேஸ்ட் வடிவில் இருக்கின்றன. நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டு, அதன்பின் மும்பை, பாட்னா, புனே நகரங்களுக்கு ரயில்கள் மற்றும் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன.
குறிப்பாக 37.126 கிலோ எடையுள்ள தங்கத்தை 40 பொட்டலங்களில் வைத்து அதை மறைக்க பிரத்யேக உடையை அணிந்து வந்த 2 சூடான் நாட்டவர்களும், இந்த சோதனையில் சிக்கினர். இதேபோல கடந்த 2 நாள்களில் நடத்தப்பட்ட பல்வேறு சம்பவங்களில் ரூ.51 மதிப்புள்ள 101.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்த முழுமையான விசாரணைக்கு பின் முழுத்தகவல் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மணமகன் கழுத்தில் அணிந்திருந்த பண மாலையை திருடிய ஸ்விகி ஊழியர்கள்