ETV Bharat / bharat

லாரியில் வெடித்த 100-க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள்

ஆந்திராவில் சிலிண்டர்கள் ஏற்றிசென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்டதால் 100 சிலிண்டர்கள் வெடித்து சிதறின.

Etv Bharat100 சிலிண்டர்கள் வெடித்து விபத்து - உயிர்சேதம் இல்லை

author img

By

Published : Sep 2, 2022, 12:23 PM IST

அமராவதி: ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் தத்தவாடா அருகே அனந்தபூர்-குண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த 300-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதுகுறித்து போலீசார் தரப்பில், "இந்த லாரி நெல்லூர் மாவட்டம் கர்னூலில் இருந்து உலவபாடு நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அப்போது தத்தவாடா அருகே லாரியின் கேபினில் தீ பிடித்துள்ளது. இதைக்கண்ட லாரி ஓட்டுநர் மோகன்ராஜூ லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தூரமாக சென்றுவிட்டார். இதையடுத்து போலீசாருக்கும் தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்தார். இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து பாதுகாப்பு கருதி அந்த சாலையில் எந்த வாகனத்தையும் அனுமதிக்கவில்லை. அதோடு லாரி அருகில் இருந்த 30 குடும்பங்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். இதனிடையே கேஸ் சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறியது. லாரி முழுவதும் எரிந்து நாசமானது. இருப்பினும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்திய கர்ப்பிணி உயிரிழப்பு... சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.