உத்தரப் பிரதேசம்: ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் பாபு, வழக்கறிஞராக உள்ளார். ஷாஹாபாத் காவல் நிலையத்திற்கு இன்று (செப். 17) காலை சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று வினோத் பாபுவின் இருசக்கர வாகனத்தின் மீது ஏறியது. அப்போது, வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கைப்பைகளில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை (ஒவ்வொரு பையிலும் தலா ரூ. 50,000) எடுத்துக்கொண்டு மரத்தில் ஏறியது.
இதைக் கண்ட அவர் செய்வதறியாது நின்றார். அப்போது, 50 ஆயிரம் ரூபாய் உள்ள ஒரு பணப்பையை கீழே போட்டுவிட்டது. மற்றொரு பணப்பையிலிருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை காற்றில் பறக்கவிட்டது. குரங்கின் செயலைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்தும் முடியவில்லை.
ரூ. 8500 இழப்பு
பின்னர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வினோத் பாபு பணத்தைச் சேகரித்தார். ரூபாய் நோட்டுகளை குரங்கு கிழித்ததில் 17 ஐநூறு ரூபாய் நோட்டுகள் நாசமாகின. இதனால் அவருக்கு 8500 ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
அப்பகுதிகளில் சில நாள்களாக குரங்குகள் அதிகம் சுற்றித் திரிந்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவருகின்றன. இதைக் கட்டுப்படுத்த வனத் துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனப் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க்: ஷார்ட்ஸ் அணிந்து தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு தடை