ETV Bharat / bharat

இந்திய - அமெரிக்க பாதுகாப்புத்துறையில் நவீன தொழில்நுட்பம்... ‘INDUS-X’ திட்டம் விரைவில் அறிமுகம்!

author img

By

Published : Jun 5, 2023, 8:37 PM IST

இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் அதிநவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் வகையில், ‘INDUS-X’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

USA minister
அமெரிக்க அமைச்சர்

டெல்லி: அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று (ஜூன் 4) இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று (ஜூன் 5) சந்தித்து, லாய்டு ஆஸ்டின் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளின் பாதுகாப்பு துறை செயல்பாடுகள், ஒருங்கிணைந்து செயல்படுதல், நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாய்டு, “பாதுகாப்புத்துறையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு வருவதை பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதற்காக ‘INDUS-X’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வரும் போது முறைப்படி அறிமுகம் செய்யப்படும்.

தொழில்நுட்பம் மட்டுமின்றி அனைத்து வகையான அம்சங்களையும் இரு தரப்பும் பகிர்ந்து கொள்வோம். ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் இணைந்து செயல்படுவது குறித்து ராஜ்நாத் சிங்குடன் ஆலோசித்தேன். கடல்வழி போக்குவரத்திலும், தொழில்நுட்பங்களை பரிமாறுவது குறித்து ஆலோசனை செய்தோம்" என கூறினார்.

இதையடுத்து இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவது குறித்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டுடன், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பதிவில், “இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் சுதந்திரமான பாதுகாப்புக்கு இந்தியா - அமெரிக்கா கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. அமெரிக்கா பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டினை சந்தித்து ஆலோசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு துறைகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தோம்" என கூறியுள்ளார்.

மேலும் பாதுகாப்புத் துறையில் தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை அடையாளம் காண்பது தொடர்பாக ஆலோசித்தனர். பாதுகாப்பு உபகரணங்களுக்கான விநியோகச் தொடர்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடினர். இதன்மூலம், இந்தியாவும் அமெரிக்காவும் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இணைந்து வளர்வதற்கான வாய்ப்புகள் குறித்து அடையாளம் காண முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு தளவாடங்களை இணைந்து உற்பத்தி செய்யவும், இரு நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பை எளிதாக்கவும் ஆலோசனை கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம், அமெரிக்க - இந்திய பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புக்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள், அடுத்த சில ஆண்டுகளுக்கு இரு நாடுகளின் கொள்கை எந்த திசையில் இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை, 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசு பணிக்கு திரும்பிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள்.. அவ்வளவு தானா போராட்டம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.