அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள டாக் டே புயலின் காரணமாக புதுச்சேரிக்குட்பட்ட மாஹே பிராந்தியத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வானப் பகுதிகளான ரயில் நிலையம், மண்டல அதிகாரி அலுவலகம், கடற்கரை நடைபாதை உட்பட அனைத்துப் பகுதிகளும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
புயலின் காரணமாக ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் கடலோரக் கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்துள்ளது.
தலச்சேரி முதல் மாஹே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் பரம்பத், மண்டல நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க : கரோனாவிலிருந்து மீண்ட ரங்கசாமி; அப்பா பைத்தியசாமி கோயிலில் சாமி தரிசனம்!