ETV Bharat / bharat

பார்த்தா சாட்டர்ஜியும்... நடிகர் மிதுன் சக்கரவர்த்தியும்...! - பங்களாவில் நாய்கள் வளர்த்த பார்த்தா சாட்டர்ஜி

ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில், கைதான அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, ஏசி பங்களாவில் நாய்கள் வளர்த்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

dogs
dogs
author img

By

Published : Jul 24, 2022, 5:40 PM IST

கொல்கத்தா: பள்ளி ஆசிரியர்கள் நியமன ஊழல் தொடர்பான வழக்கில், மேற்கு வங்க தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி நேற்று(ஜூலை 23) கைது செய்யப்பட்டார். அவருக்கு இரண்டு நாட்கள் காவல் விதிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கைதான திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கும், முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியும் நடிகருமான மிதுன் சக்கரவர்த்திக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

இருவரும் செல்லப்பிராணிகளாக நாய்களை வளர்த்து வந்தனர். தங்களது பங்களாவில் ஏர் கன்டிஷ்னர் வசதியுடன் நாய்கள் வளர்த்தனர். அவற்றை பராமரிக்க வேலையாட்களை வைத்திருந்தனர். இருவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினர்.

சாட்டர்ஜி ஆசிரியர்கள் நியமன ஊழலில் சிக்கினார். மிதுன் சக்கரவர்த்தி சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிக்கினார். சாட்டர்ஜி தற்போது திரிணாமுல் காங்கிரசில் இருக்கிறார், மிதுன் சக்கரவர்த்தி திரிணாமுல் காங்கிரசில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து, பின்னர் பாஜகவில் சேர்ந்தார்.

ஆனால், மிதுன் சக்கரவர்த்தி அமலாக்கத்துறையின் பிடியில் இருந்து சில நாட்களில் தப்பிவிட்டார். சாட்டர்ஜியும் தனது முன்னாள் சகாவைப் போல தப்பிப்பார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க:நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டிலிருந்து ஊழல் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.