ETV Bharat / bharat

அக்னி வீரர் தற்கொலையில் ராணுவம் விளக்கம்! தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

ஜம்மு - காஷ்மீரில் பணியின் போது தற்கொலை செய்து கொண்டதன் காரணத்தால் அக்னிபாத் வீரர் அம்ரித்பால் சிங்கின் இறுதிச் சடங்கில் ராணுவ மரியாதை அளிக்கப்படவில்லை என ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

military-honours-denied-at-agvineer-amritpals-funeral-as-per-policy-he-committed-suicide-army
தற்கொலை செய்து கொண்ட அக்னி வீரர்...தொடர் சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்த ரானுவம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 11:08 AM IST

Updated : Oct 16, 2023, 1:20 PM IST

டெல்லி: பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித்பால் சிங் என்பவர் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்தார். ஜம்மு காஷ்மீர் ரைபிள் படையில் பூன்ச் பகுதியில் அம்ரித்பால் சிங் பணியாற்றி வந்த நிலையில் கடந்த அக். 10ஆம் தேதி பணியில் இருந்த போது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான பஞ்சாப்புக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அக்னிபாத் வீரர் அம்ரித்பால் சிங்கின் உடலுக்கு இந்திய ராணுவத்தின் சார்பில் இறுதி மரியாதை அளிக்கப்படவில்லை என நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த ராணுவம், அமிரித்பால் சிங் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டதால் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும், இதனால் வழக்கமான முறைப்படி அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது. இருப்பினும் அவருடன் பணியாற்றிய சக வீரர்கள் அமிரித்பாலின் இறுதிச் சடங்கில் பங்கேற்றதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 2 முறை விளக்கம் அளித்துள்ள ராணுவம், இது குறித்து x தளத்தில் தெரிவித்து உள்ளதாவது, "அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்த அம்ரித்பால் சிங் துரதிர்ஷ்டவசமாக கடந்த 11 அக்டோபர் 2023 அன்று, உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாகத் தவறான புரிதல்கள் உள்ளன. அக்னி வீரர் என்பதால், இறுதிச் சடங்கிற்கு ராணுவ மரியாதை அளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

  • Unfortunate Death of Agniveer Amritpal Singh on 11 Oct 2023.

    There has been some misunderstanding and misrepresentation of facts related to unfortunate death of Agniveer Amritpal Singh.

    Further to the initial information given out by White Knight Corps on 14 Oct 2023,… pic.twitter.com/6rhaOu3hN8

    — ADG PI - INDIAN ARMY (@adgpi) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அக்னிபாத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ படையில் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் ராணுவ வீரர்களிடையே பாகுபாடு காட்டப்படுவது இல்லை. துரதிர்ஷ்டவசமான மரணங்கள் தவிர தற்கொலை, சுய காயத்தால் ஏற்படும் மரணங்கள், போன்ற எந்த வகையைச் சார்ந்த மரணத்தில் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் உள்ள நடைமுறையின் படி இது போன்ற நிகழ்வுகளுக்கு ராணுவத்தின் வழக்கமான மரியாதை வழங்கப்படுவது இல்லை.

1967ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இது தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. 2001 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுக்குச் சராசரியாக 100 முதல் 140 வீரர்கள் தற்கொலை மற்றும் சுய காயங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மரணிக்கின்றனர். அவர்கள் யாருக்கும் ராணுவ மரியாதை வழங்கப்படுவது இல்லை.

மாறாக அவர்களின் இறுதி சடங்கிற்கு தேவையான நிவாரணங்களை வழங்குவது, மருத்துவ செலவுகள் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சமயங்களில், குடும்பத்தின் மரியாதை, தனியுரிமை மற்றும் கண்ணியத்தை நிலைநிறுத்துவது சமூகத்தின் முக்கிய கடமையாகும், அதே நேரத்தில் அவர்களின் துயரமான தருணத்தில் அனுதாபம் காட்ட வேண்டும்" என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச உணவு தினம் : பட்டினியில்லா சமுதாயத்தை உருவாக்க போருக்கு தயாராகும் பசி!

Last Updated : Oct 16, 2023, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.