ஸ்ரீநகர்(ஜம்மு-காஷ்மீர்): ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமாவில் நேற்று(ஜூன் 19) பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை மற்றும் ராணுவத்தின் 55 ராஷ்ட்ரிய படை வீரர்கள் மற்றும் சிஆர்பிஎப்பின் 183,182 பட்டாலியன்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இது குறித்து காஷ்மீர் காவல்துறை விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ‘புல்வாமாவின் சாட்போரா பகுதியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புத் துறையினர் சென்ற போது அப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதாகவும், பின்னர் CRPF வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று தொடங்கிய துப்பாக்கிச்சூடு இன்று(ஜூன்20) அதிகாலை 3 மணி வரை நீடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:புல்வாமாவில் போலீஸ் சுட்டுக்கொலை