டெல்லியில் நேற்று இரவு 10 மணிமுதல் ஏப்ரல் 26ஆம் தேதி காலை 5 மணி வரை ஆறு நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், நேற்று இரவு முதல் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஆனந்த் விகார் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
அதிகப்படியான கூட்டம் காரணமாக பேருந்துகளில் இடம் கிடைக்காமல் பலர் வெகு நேரமாகக் காத்திருந்தனர். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 20) காலை பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த வல்லபாய் பட்டேல் கோவிட் மருத்துவமனை