ETV Bharat / bharat

இந்திய அறிவியல் மாநாடு - சென்சார் கண்ணாடி மூலம் கவனம் ஈர்த்த நாகை மாணவர்கள்!

author img

By

Published : Jan 6, 2023, 4:21 PM IST

நாக்பூரில் நடைபெற்று வரும் இந்திய அறிவியல் மாநாட்டில், நாகை மாணவர்கள் காட்சிப்படுத்திய 'கண்பார்வை இழந்தோருக்கான சென்சார் கண்ணாடி' பார்வையாளர்களை ஈர்த்தது.

MH
MH

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 108ஆவது இந்திய அறிவியல் மாநாடு கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக குழந்தை விஞ்ஞானிகள் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் 10 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.

நூற்றுக்கணக்கான சிறுவர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். அதில், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாணவர்கள் காட்சிப்படுத்திய கண்பார்வை இழந்தோருக்கான பிரத்யேக கண்ணாடி பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தது.

நாகை மாணவர்கள் சபரிவாசன் மற்றும் அஃப்சல் முகமது இருவரும் சேர்ந்து இதனை வடிவமைத்துள்ளனர். இதில் சென்சார் மற்றும் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. கண் பார்வையற்றவர்கள் இந்த கண்ணாடியை போட்டுக் கொண்டு செல்லும்போது, இவை சாலைகளில் உள்ள இடர்கள் குறித்து எச்சரிக்கும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

கண்பார்வை இழந்தோருக்கான சென்சார் கண்ணாடி

பார்வையற்றவர்கள் இந்த கண்ணாடியைப் பயன்படுத்தினால், மற்றவர்களின் உதவி இல்லாமல் செயல்பட முடியும் என்றும், பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த கண்ணாடியின் விலை இரண்டாயிரம் ரூபாய் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ட்விட்டரில் விரைவில் அரசியல் விளம்பரங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.