ETV Bharat / bharat

செல்ஃபி எடுப்பதில் தகராறு: பிரித்வி ஷா நண்பரின் கார் மீது தாக்குதல்! - 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுடன் செல்ஃபி எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அவரது நண்பரின் காரை அடித்து நொறுக்கிய இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பிரித்விஷா நண்பர்
பிரித்விஷா நண்பர்
author img

By

Published : Feb 16, 2023, 8:23 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு, இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா சென்றார். அப்போது அவருடன் செல்ஃபி எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஷாவின் நண்பரின் கார் தாக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சனா கில் மற்றும் ஷோபித் தாகூர் ஆகியோர் பிரித்வி ஷாவுடன் செல்ஃபி எடுத்துள்ளனர். மீண்டும் ஒரு முறை செல்ஃபி எடுக்க இருவரும் வற்புறுத்திய நிலையில், ஷா மறுத்துள்ளார். இதற்கிடையே அங்கு வந்த ஹோட்டல் மேலாளர், இருவரையும் அங்கிருந்து வெளியேற்றினார்.

இந்நிலையில் ஹோட்டலில் இருந்து பிரித்வி ஷா நண்பரின் கார் வெளியே வந்தது. ஜோகேஸ்வரி லிங் ரோடு வழியாக கார் சென்ற போது, அதை சனா மற்றும் ஷோபித் பின்தொடர்ந்தனர். காருக்குள் பிரித்வி ஷா இருப்பதாக கருதி, பேஸ்பால் மட்டையால் கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். ஆனால் அந்த காரில் ஷா செல்லவில்லை.

மேலும், பிரித்விஷாவின் நண்பரை மிரட்டிய இருவரும், ரூ.50,000-ஐ கேட்டுள்ளனர். பணத்தை தராவிட்டால் போலீசில் பொய்யான புகார் அளித்துவிடுவோம் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஷாவின் நண்பர் அளித்த புகாரின் அடிப்படையில், தாக்குதல் நடத்திய இருவர் மீதும், போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: உ.பியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.