நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நேற்று(ஜன.24) பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது, சிறுமியின் தோழனுடைய நண்பர்கள் இருவர் காரில் வந்துள்ளனர்.
அவர்கள் சிறுமியின் வீட்டு வழியாக தாங்கள் செல்வதால், தங்களுடன் காரில் வரும்படி கோரியுள்ளனர். இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால், சிறுமி அவர்களுடன் காரில் ஏறிச் சென்றுள்ளார். ஆனால், அவர்கள் திடீரென சிறுமியின் வீட்டுக்குச் செல்லாமல் வேறு வழியில் சென்றுள்ளனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவர்கள், கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்த நிலையில், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கூட்டுப்பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: 2 இளைஞர்களுக்கு தலா 20 ஆண்டுகள் ஜெயில்!