ETV Bharat / bharat

பெண்களின் ஆடை குறித்து சர்ச்சை பேச்சு - வருத்தம் தெரிவித்தார் பாபா ராம்தேவ்... - Ramdev Apologize

பெண்களின் ஆடை குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதற்கு யோகோ குரு பாபா ராம்தேவ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்
author img

By

Published : Nov 28, 2022, 12:22 PM IST

மும்பை: மும்பை புறநகர் தானேவில் கடந்த வெள்ளிக்கிழமை யோகா விழா நடந்தது. இதில், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் சிண்டேவின் மகனும் எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் சிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்சின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பதஞ்சாலி நிறுவனர் பாபா ராம்தேவ், பெண்கள் சேலையில் அழகாக இருக்கிறார்கள், சல்வாரிலும் அழகாக தெரிகிறார்கள், என்னுடைய பார்வையில் ஆடைகள் எதுவுமின்றியும் பெண்கள் அழகாக தெரிவதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறினார்.

பாபா ராம்தேவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மராட்டிய துணை முதலமைச்சரின் மனைவியை அருகில் வைத்துக் கொண்டு பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பாபா ராம்தேவை கைது செய்யக் கோரி மகளிர் அமைப்பினர் கண்டனக் கொடி தூக்கினர். மேலும் பாபா ராம்தேவின் உருவப் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

  • बाबा रामदेव उर्फ राम किसन यादव यांनी ठाणे येथील एका सार्वजानिक कार्यक्रमात महिलांसंबंधी अत्यंत खालच्या पातळीवर जाऊन विधान केले होते. या वक्तव्याची राज्य महिला आयोगाने गंभीर दखल घेत बाबा रामदेव उर्फ राम किसन यादव यांना याबाबतीत आपला खुलासा दोन दिवसाच्या आत सादर करण्यासाठी नोटिस१/२ pic.twitter.com/umI27luSK7

    — Rupali Chakankar (@ChakankarSpeaks) November 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், பெண்களின் ஆடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும், அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மராட்டிய மாநில மகளிர் ஆணையம் யோகா குரு பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், பெண்களின் ஆடை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்கு யோகா குரு பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரினார். மின்னஞ்சல் மூலமாக மகாராஷ்ட்ரா மாநில மகளிர் ஆணையத்திடம் பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வாயிலாக தன் வருத்தத்தை பாபா ராம்தேவ் தெரிவித்ததாகவும், மேலும் விழாவில் தான் பேசியது தவறான முறையில் பரவ விடப்பட்டதாக கடிதத்தில் பாபா ராம்தேவ் கூறியுள்ளதாகவும் மகளிர் ஆணையம் தெரிவித்தது.

இதையும் படிங்க: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராகிறார் பி.டி. உஷா...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.