ETV Bharat / bharat

raigad accident: பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 8 பேர் பலி; 25 பேர் படுகாயம்! - மஹாராஷ்டிரா பேருந்து விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 25 பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 15, 2023, 8:10 AM IST

Updated : Apr 15, 2023, 9:29 AM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து புனேவுக்கு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை(இன்று) அதிகாலை சுமார் 4.30 மணிக்கு ஷிந்த்ரோபா கோயில் அருகே சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் உள்ள சுமார் 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 25 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் ராய்காட் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உதம்பூரில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: பலர் படுகாயம்!

Last Updated : Apr 15, 2023, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.