பெல்காவி: கர்நாடகாவின் பெல்காவி மாவட்டத்தில் உள்ள தாம்னே கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அதிர்ச்சிகரமான தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சித்து சாய்பண்ணவர் - ரேஷ்மா இணையரின் திருமண விழா நேற்று முன்தினம் (மே 26) நடந்தது.
அன்றிரவு அவர்கள் வீட்டில் நடைபெற்ற திருமண கொண்டாட்டத்தின்போது, கன்னட பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டு அனைவரும் நடனமாடி வந்துள்ளனர். 'கருநாடே' என்ற கன்னட பாடல் ஓடிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த இளைஞர்கள் கையில் கர்நாடக கொடியுடன் நடனமாடி உள்ளனர்.
அப்போது, அங்கு புகுந்த 'மகாராஷ்டிர எகிகரன் சமிதி' என்ற மகாராஷ்டிர இயக்கத்தினர் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், கன்னட பாடல்களை ஒலிக்கவிட்டதற்காக மணமக்கள் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர்கள் பெல்காவியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக, மகாராஷ்டிர அமைப்பைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் தொடரும் ஆணவக்கொலை: பெற்றோரே மகளைக் கொலை செய்த கொடூரம்!