ETV Bharat / bharat

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஒற்றைத் தலைவலியும்...தீர்வுகளும்! - மைக்ரேன்

ஒவ்வொருவரின் வாழ்க்கை, பழக்க வழக்கங்களை பொறுத்து ஒற்றைத் தலைவலி தாக்குகிறது. பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஒற்றைத் தலைவலியை சரிசெய்ய சில வழிமுறைகளை இங்கு காணலாம்.

தலைவலி
தலைவலி
author img

By

Published : Apr 29, 2021, 5:29 PM IST

பெண்கள் மாதவிடாய் சமயங்களில் பல்வேறு மன மற்றும் உடல் நல பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். சிலருக்கு தாங்கவியலா வயிறு வலி, கால் வலி ஏற்படும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படும். இதனால், மாதவிடாய் நாள்களை அவர்களால் இயல்பாகக் கடக்க முடிவதில்லை.

நல்லா ரெஸ்ட் எடுங்க
நல்லா ரெஸ்ட் எடுங்க

தோராயமாக அறுபது விழுக்காடு பெண்களுக்கு பிஎம்எஸ் (PMS) எனப்படும் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் (Pre-Menstrual Syndrome) ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாதவிலக்கு முடிந்தவுடன் தொடரும் முதல் இரண்டு வாரங்கள் பெண்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் எனப்படும் ஹார்மோன்கள் சீரான நிலையில் இல்லாதபோது, இரண்டு வகையான தலைவலி ஏற்படுகிறது.

1). ஒற்றைத் தலைவலி

2). ஹார்மோன் தலைவலி

ஹார்மோன் மாறுபாடுகளால் மூளையில் சுரக்கும் நரம்பு செல்களில் ஏற்படும் மாற்றங்கள் பெண்களை அதிகம் பாதிக்கிறது. மைக்ரேன் உள்ளவர்களுக்கு பதற்றம் சார்ந்த மன நல பிரச்னை வருவதற்கு இரண்டரை மடங்கு வாய்ப்பு அதிகமுள்ளது.

காபி
காபி

இந்தநபர்களுக்கு மாதவிடாய் நேரங்களில் விளக்குகளைப் பார்க்கும் போது, ஜிக்ஜாக் கோடுகளைப் பார்க்கும்போது தலைவலி அதிகரிக்கலாம். இந்தக் கட்டுரையில் ஒற்றைத் தலைவலியைக் குறைக்க சில வழிமுறைகளை காணலாம்.

தலைவலி
தலைவலி

போதுமான ஓய்வு

தூக்கமின்மை தலைவலிக்கு வழிவகுக்கலாம். பகல் தூக்கத்தைவிட இரவில் தூங்குவது நலம். ஒரு நாளுக்கு இரவு 7 முதல் 9 மணி நேரம் தூங்குங்கள்.

யோகா செய்யலாம்!

யோகா, தியானம், மூச்சு பயிற்சி ஆகியன செய்யலாம். இவை தசைகளை தளர்த்தி, மன அழுத்தத்தை நீக்கி, தலைவலி அறிகுறிகளைக் குறைக்கும். ஒருநாளுக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம்.

உடற்பயிற்சி செய்யுங்க..
உடற்பயிற்சி செய்யுங்க..

மருந்துகள்

அசிட்டமினோபன், இப்யூபுரூஃபன், நாப்ராக்ஸன் சோடியம், ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகு, இந்த வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.

மேலும் 16 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு ஆஸ்ஃப்ரின் மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது. காஃபினேட்டட் பானம் குடிப்பதால் சிலருக்கு தலைவலி குறையும். இதைத்தொடர் பழக்கப்படுத்தி அருந்துவது நல்லதல்ல. அதிகப்படியான காஃபின் தூக்கமின்மை போன்ற பிற சிக்கல்களைத் தரும்.

ஹார்மோன் சிகிச்சை

மேற்குறிப்பிட்டவற்றினால் தலை வலியைக் குறைக்க முடியாத போது, ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மாதவிடாய் சுழற்சிக்கு முன் இந்த சிகிச்சையை செய்யும்போது, ஹார்மோன்களில் சமநிலையைப் பராமரிக்க உதவும்.

சில நேரங்களில் ஹார்மோன் சீரின்மையை சரிசெய்ய ஈஸ்ட்ரோஜன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ள மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.