சில்லாங்: மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் சங்மாவுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், " எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசானா அறிகுறிகள் இருப்பதால், வீட்டிலேயே என்னை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளேன். கடந்த ஐந்து நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் தங்களது உடல்நிலையின் மீது கவனம் செலுத்தி, தேவைபட்டால் கரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்" எனக் குறிப்பட்டுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, மேகாலாய மாநிலத்தில் இன்று (டிசம்பர் 11) புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 883ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 580 பேர் அம்மாநிலத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களின் அரசுகள் கரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்த பிரபல இயக்குநர் - ரசிகர்கள் அதிர்ச்சி