போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு வயது பெண் குழந்தை, சானிகா படேல். இவர் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி, அந்தப் பாடலைப்பாடி விவசாயப் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளார்.
இவரது இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. சானிகாவின் இந்தப் பாடல் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளிடையே பிரபலமாக உள்ளது. மேலும் இந்தப் பாடல் விவசாயிகளின் உரிமைகளுக்காக நிற்கவும், அவர்களின் தைரியத்தை அதிகரிக்கவும் செய்வதாகக் கூறியுள்ளனர்.
ஈடிவி பாரத் இணையதளத்திடம் பேசிய சனிகா, "விவசாயிகளின் பொருளாதாரப் பிரச்னைகளை மதித்து புரிந்துகொள்வது முக்கியம். இந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படாத வரை, விவசாயிகளின் போராட்டம் தொடர வேண்டும்.
அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானவை. அடுத்தடுத்த நாட்களில் விவசாயிகளின் நிலம் தொழிலதிபர்களால் கையகப்படுத்தப்படும். இது அவர்களின் சொந்த நிலத்தில் அடிமைகளாக இருப்பதைக் குறைக்கும்" என்றும் அவர் கூறினார்.
'கவலைப்படவேண்டாம் விவசாயிகளே, போராடுவது கடினம் தான். இந்தக் கிளர்ச்சி வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும்' என விவசாயிகளுக்கு நம்பிக்கைத் தெரிவித்த சானிகா, 'விவசாயியின் மகளாக உள்ளதால், தான் விவசாயிகளின் அவல நிலையை புரிந்துகொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : 'விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நல்லெண்ணம் கிடையாது' - ராகுல்காந்தி